Enable Javscript for better performance
அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் ஊழியர் விரோதப் போக்கை கண்டித்து, விருதுநகரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 
         விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் எஸ். முத்துராஜ் தலைமை வகித்தார். 
     அதில், திருவண்ணாமலை ஆட்சியர், அரசு ஊழியர்களிடம் விரோதப் போக்கை கடைபிடிப்பதற்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்கள் எழுப்பினர். 
     இதில், இணைச் செயலர் புகழேந்தி, மாவட்டச் செயலர் ச.இ. கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், அரசு ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai