Enable Javscript for better performance
அருப்புக்கோட்டையில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    அருப்புக்கோட்டையில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

    By DIN  |   Published on : 09th February 2018 02:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அருப்புக்கோட்டை கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம், அருப்புக்கோட்டை கோட்டச் செயற்பொறியாளர் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
          இக் கூட்டம், விருதுநகர் மின்பகிர்மானக் கழக மேற்பார்வைப் பொறியாளர் ஏ. அசோக்குமாரின் தலைமையிலும், அருப்புக்கோட்டை கோட்டச் செயற்பொறியாளரின் முன்னிலையிலும் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. எனவே, இதில் மின்நுகர்வோர் தமது குறைகளை நேரில் தெரிவித்து தீர்வு காணலாம், என அருப்புக்கோட்டை கோட்டச் செயற்பொறியாளர் இரா. கண்ணன் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai