Enable Javscript for better performance
இருக்கன்குடி சாலையை  சீரமைக்க கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    இருக்கன்குடி அணை வழியாக மாரியம்மன் கோயிலுக்குச் செல்லும் சாலையை சீரமைக்க, வாகன ஓட்டுநர்கள் மற்றும் பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே இருக்கன்குடியில் உள்ள புகழ்பெற்ற  மாரியம்மன் கோயில், வைப்பாறு, அர்ச்சுனா நதியும் இணையும் இடத்தில் அமைந்துள்ளது. அர்ச்சுனா நதி மற்றும் வைப்பாறு இணையும் இடத்தில் நீர்த்தேக்க அணையும் உள்ளது.இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்குச் செல்லும் வாகனங்கள், நீர்த்தேக்க அணையின் அருகே பொதுப்பணித் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை கடந்த சில ஆண்டுகளாக கற்கள் பெயர்ந்து மிக மோசமான நிலையில் உள்ளது. திருவிழா நாள்களில் இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வருவது வழக்கம். கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் வரும் ஏராளமான பக்தர்கள் இச்சாலை வழியே கோயிலுக்குச் செல்கின்றனர்.
    எனவே, பக்தர்கள் நலன் கருதி, இந்தச் சாலையை சீரமைக்க பொதுப்பணித் துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பக்தர்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    இது குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறுகையில், சாலையை சீரமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai