Enable Javscript for better performance
கோழிகளுக்கு இன்று முதல் பிப். 22 வரை சிறப்பு தடுப்பூசி முகாம்: கால்நடைத் துறை இணை இயக்குநர் தகவல்- Dinamani

சுடச்சுட

    

    கோழிகளுக்கு இன்று முதல் பிப். 22 வரை சிறப்பு தடுப்பூசி முகாம்: கால்நடைத் துறை இணை இயக்குநர் தகவல்

    By DIN  |   Published on : 09th February 2018 02:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் மாவட்டத்தில் கோழிகளுக்கு பரவும் வெள்ளைக் கழிச்சல் நோயைக் கட்டுப்படுத்த பிப்ரவரி 9 முதல் 22 ஆம் தேதி வரை, அனைத்து கால்நடை மருத்துவமனைகளிலும் சிறப்பு முகாம் மூலம் தடுப்பூசி போட  உள்ளதாக, மாவட்ட கால்நடைத் துறை இணை இயக்குநர் ஜெகதீசன் வியாழக்கிழமை தெரிவித்தார். 
         இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:  கோழி வெள்ளைக் கழிச்சல் என்பது புறக்கடைக் கோழிகள், பண்ணைக் கோழிகள், வான்கோழி மற்றும் வாத்துகளைத் தாக்கும் வைரஸ் கிருமியினால் பரவும் நோயாகும். இந்நோய் கண்ட கோழிகள் வெள்ளை நிறத்தில் கழிச்சல் ஏற்பட்டு சோர்ந்து போய், அதிக அளவில் இறக்கின்றன.
          இதனை கொக்கு நோய் என்றும் வழக்கு மொழியில் பொதுமக்கள் கூறுவர். இந்நோயைத் தடுக்க 8 வார வயதுக்கு மேற்பட்ட கோழிகளுக்கு ஆண்டுக்கு ஒரு முறை தடுப்பூசி போடவண்டும். இந்நோயைத் தடுக்க கால்நடை பராமரிப்புத் துறை மூலம் ஒவ்வொரு ஆண்டும் வெயில் காலத்துக்கு முன் சிறப்பு முகாம் நடத்தி தடுப்பூசி போடப்படும்.
        தற்போது, இச்சிறப்பு முகாம் பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் உள்ள கால்நடை மருத்துவமனை, கால்நடை மருந்தகங்கள் மற்றும் கிளை நிலையங்களில் நடைபெற உள்ளது. இம்முகாமில் 1.15 லட்சம் கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை, புறக்கடை கோழி வளர்ப்போரும், பண்ணையாளர்களும் பயன்படுத்தி, தங்களது கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் தடுப்பூசி இலவசமாக போட்டுக் கொள்ளலாம் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai