Enable Javscript for better performance
சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை மனு- Dinamani

சுடச்சுட

    

    சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை மனு

    By DIN  |   Published on : 09th February 2018 02:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் நகராட்சிப் பகுதியில் உள்ள முக்கிய பிரச்னைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவிடம், விருதுநகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலர் முருகன் வியாழக்கிழமை மனு அளித்தார். 
       அந்த மனுவில் கூறியிருப்பதாவது: விருதுநகர் நகராட்சியில் கடந்த 1980 ஆம் ஆண்டு 245 துப்புரவுத் தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். தற்போது, நகராட்சிப் பகுதிகளில் குடியிருப்புகள் அதிகரித்ததுடன், மக்கள் தொகையும் உயர்ந்துள்ளது. ஆனால், அதற்கேற்றாற் போல் துப்புரவுப் பணியாளர்கள் இல்லை. 
         தற்போது, விருதுநகர் நகராட்சியில் 90 பேர் மட்டுமே நிரந்தர துப்புரவுத் தொழிலாளர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர். அதில், பாதிக்கும் மேற்பட்டோர் 50 வயதை கடந்துவிட்டனர். இதனால், மாவட்டத் தலைநகரான விருதுநகரில் துப்புரவு பணிகள் சரிவர நடப்பதில்லை. எங்கு பார்த்தாலும் குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன. வாய்க்காலில் மண் சேர்ந்து கழிவு நீர் தேங்கி இருப்பதால்,  கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி ஏராளமானோருக்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. 
         எனவே, விருதுநகர் நகராட்சியில் உடனடியாக நிரந்தரமாக 300 துப்புரவுத் தொழிலாளர்களை புதிதாக பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 
         விருதுநகர் நகராட்சி நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழக அரசு ரூ. 25 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்தது. அதில், வி.என்.பி.ஆர். பூங்கா சீரமைப்புக்கு ரூ. 1 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், அப்பணிகள் மிகவும் தரமற்ற முறையில் நடந்து வருகிறது, 30 சதவீதப் பணிகள் கூட சரியாக முடிக்கப்படவில்லை.
         நூற்றாண்டு விழா பணிகளான நகராட்சிக் கட்டடம் கட்டுதல் ( ரூ.2 கோடி), ஆட்டுச் சந்தையில் கட்டடம் கட்டுதல் ( ரூ.1 கோடி) ஆகிய பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. அதேபோல், விருதுநகரில் நாளொன்றுக்கு சுமார் 54 லட்சம் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. எனவே, கூடுதலாக ஒரு கூட்டுக் குடிநீர் திட்டத்தை விருதுநகர் நகராட்சிப் பகுதிக்கு நிறைவேற்ற வேண்டும். இதன்மூலம், குடிநீர் பிரச்னையை சரி செய்ய முடியும். 
        மேலும், விருதுநகர் நகராட்சி எல்கையை விரிவுபடுத்த உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் சார்பில் கேட்டுக் கொள்வதாக, அதில் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai