Enable Javscript for better performance
சிவகாசியில் சாலையில் தேங்கிய கழிவு நீர்- Dinamani

சுடச்சுட

    

    சிவகாசி நகராட்சிப் பகுதியில் கழிவுநீர் வாய்க்கால்கள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளதால், புதன்கிழமை இரவு பெய்த மழையில் சாலையில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதித்தது.
        சிவகாசி நகராட்சிப் பகுதியில், கடந்த சில மாதங்களாக பல இடங்களில் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளன. இந்நிலையில், புதன்கிழமை இரவு சிவகாசியில் 33 மி.மீ. அளவு மழை பெய்தது. வியாழக்கிழமை காலையில், சிவகாசி-வெம்பக்கோட்டை சாலையில் சி.இ.நா.வி.மேல்நிலைப் பள்ளியின் பின்புறத்தில் தண்ணீர் செல்ல வாய்க்கால் இல்லாமல், சாலையில் மழை நீர் தேங்கியது. இதனால், பள்ளி சென்ற மாணவ, மாணவியர் மிகவும் அவதிப்பட்டனர். இரு சக்கர வாகனம் உள்ளிட்ட வாகன ஓட்டிகளும் சிரமப்பட்டனர்.இப்பகுதியில் மழைநீர் செல்ல வாய்க்கால் அமைக்கப்படாமல் உள்ளதால், தண்ணீர் தேங்கி, சுகாதாரக் கேடு பரவுகிறது.
          இதேபோல்,  என்.ஆர்.கே.ஆர். சாலை, புதுரோட்டு தெரு, சிவகாசி-திருத்தங்கல் சாலையில் காமராஜர் பூங்கா பகுதிகளில் கழிவு நீர் வாய்க்காலில் இருந்த கழிவுகள் சாலைக்கு அடித்து வரப்பட்டன. இதனால், சாலையெங்கும் சகதி காணப்பட்டது. மேலும், பிளாஸ்டிக் கழிவுகளும் சாலைக்கு வந்ததால், சுகாதாரக் கேடு நிலவுகிறது.
           எனவே, நகராட்சி நிர்வாகம் அனைத்து கழிவு நீர் வாய்க்கால்களையும் சுத்தப்படுத்தி, சேதமடைந்துள்ள பகுதிகளை சீரமைக்க வேண்டும். வாய்க்கால் இல்லாத இடங்களில் புதிதாக மழைநீர் வாய்க்கால் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai