Enable Javscript for better performance
சேதமடைந்த மின்கம்பத்தால் விபத்து அபாயம்- Dinamani

சுடச்சுட

    

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள போத்தம்பட்டி கிராமத்தில் பள்ளிக்குச் செல்லும் வழியில் சேதமடைந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றி, புதிய மின்கம்பம் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். 
        சுத்தமடம் பேரூராட்சிக்குள்பட்ட போத்தம்பட்டி கிராமத்தில் சுமார் 800 பேருக்கும் மேல் வசிக்கின்றனர். இக்கிராமத்தின் மையப் பகுதியிலிருந்து ஊராட்சிஒன்றியத் தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்குச் செல்லும் சாலை, இக்கிராமத்தை அருகிலுள்ள ஊர்களை இணைக்கும் சாலையாகவும் உள்ளது.
         எனவே, பொதுமக்களும், பள்ளி மாணவ, மாணவியரும் அதிகம் பயன்படுத்தும் இந்த சாலையின் ஓரங்களில் உள்ள பல மின்கம்பங்களும் சேதமடைந்துள்ளன.  இதில் ஒரு மின்கம்பம் காங்கிரீட் பெயர்ந்து, உள்ளிருக்கும் கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் க்ஷ்பாயகரமாக  உள்ளது.      
         இது குறித்து பலமுறை மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், போதுமான தொழிலாளர்கள் இல்லாததால், பராமரிக்கவோ, புதிய மின்கம்பம் அமைக்கவோ இயலவில்லை என அவர்கள்  காரணம் கூறுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க இப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai