Enable Javscript for better performance
பட்டாசு ஆலை விபத்தில் காயமடைந்த மேலும் ஒருவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் காயமடைந்த தொழிலாளிகளில் சிகிச்சை பலனின்றி மேலும் ஒரு தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
         சிவகாசி அருகே நெடுங்குளம் கிராமத்தில் ரவி என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையை, ராஜாசிங் என்பவர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 2 ஆம் தேதி ஆலையில் இயந்திரம் மூலம் மருந்து கலவை  செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இப்பணியில், எம்.புதுப்பட்டி செந்தில் (39), தேவர்குளம் மூர்த்தி (50) ஆகிய இரு தொழிலாளர்களும் ஈடுபட்டிருந்தனர்.
         அப்போது, உராய்தல் காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டதில், பணியில் ஈடுபட்டிருந்த இரு தொழிலாளர்களும் பலத்த காயமடைந்தனர்.
         இவர்கள் இருவரும் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதில், சிகிச்சை பலனின்றி செந்தில் புதன்கிழமை உயிரிழந்தார். தொடந்து சிகிச்சை பெற்றுவந்த மூர்த்தி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
        இது குறித்து எம்.புதுப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai