Enable Javscript for better performance
பேருந்து கண்ணாடிகளை உடைத்து நடத்துனர்கள் மீது தாக்குதல் நடத்திய கல்லூரி மாணவர்கள் 4 பேர் மீது வழக்க- Dinamani

சுடச்சுட

    

    பேருந்து கண்ணாடிகளை உடைத்து நடத்துனர்கள் மீது தாக்குதல் நடத்திய  கல்லூரி மாணவர்கள் 4 பேர் மீது வழக்கு

    By DIN  |   Published on : 09th February 2018 02:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் பேருந்து கண்ணாடியை உடைத்து, நடத்துனர்கள் இருவரை தாக்கி காயப்படுத்திய கல்லூரி மாணவர்கள் 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
    திருநெல்வேலி மாவட்டம், சிவகிரி, தென்மலையைச் சேர்ந்தவர் தங்கவேல் மகன் முத்துக்குமார் (30). இவர், ராஜபாளையத்தில் உள்ள தனியார் பேருந்தில் நடத்துனராக வேலை செய்து வருகிறார்.
    புதன்கிழமை, ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சத்திரப்பட்டி வழியாக ராஜபாளையம் செல்லும் பேருந்தில் முத்துக்குமார் நடத்துனராகப் பணியாற்றினார். பேருந்தானது,  வன்னியம்பட்டி வழியாக சத்திரப்பட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, மொட்டமலையில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் சில மாணவர்கள் பேருந்தில் கூச்சலிட்டவாறு வந்துள்ளனர். இதனால், சத்தம் போடாதீர்கள் என முத்துக்குமார் மாணவர்களிடம் கூறி வந்துள்ளார்.
    கல்லூரி நிறுத்தம் வந்ததும் முத்துக்குமார் விசில் அடித்துள்ளார். ஆனால், மாணவர்களின் கூச்சலால் ஓட்டுநருக்கு விசில் சத்தம் கேட்காமல், பேருந்தை கல்லூரி நிறுத்தத்தில் நிறுத்தாமல் மொட்டமலை பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தினாராம்.
    இதனால் ஆத்திரமுற்ற, கூமாப்பட்டி இம்மானுவேல் சேகரன் தெருவைச் சேர்ந்த தங்கப்பாண்டி மற்றும் 3 பேர் சேர்ந்து நடத்துனர்கள் முத்துக்குமார் மற்றும் அரவிந்த்குமாரை ஆபாசமாகப் பேசி தாக்கி, சாலையோரப் பள்ளத்தில் தள்ளிவிட்டனர். இதில், இருவரும் காயம் அடைந்தனர். மேலும், பேருந்தின் முன்பக்க மற்றும் பின்பக்க கண்ணாடிகளை இந்த 4 பேரும் சேர்ந்து உடைத்துள்ளர்.
    இது குறித்து நடத்துனர் முத்துக்குமார் வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீஸார் கல்லூரி மாணவர்களான தங்கப்பாண்டி உள்பட 4 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai