Enable Javscript for better performance
மகளிர் கலைக் கல்லூரியில் ஆண்டு விழா- Dinamani

சுடச்சுட

    

    விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் வி.பி.எம்.எம். மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
         இதில், கல்வி நிறுவனத் தலைவர் வி.பி.எம். சங்கர், தாளாளர் பழனிச்செல்வி ஆகியோர் தலைமை வகித்தனர். துணைத் தலைவர் வி.பி.எம்.எஸ். தங்கபிரபு, துணைத் தாளாளர் துர்கா மீனலோஷினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இயக்குநர் டாக்டர் ரா. சபரிமாலா ஆண்டறிக்கை வாசித்தார்.       மதுரை காமராஜர் ஆற்றல்சார் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் எஸ். ஆண்டியப்பன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். 
       பாடங்கள் வாரியாக சிறப்பிடம் பெற்ற மாணவிகள், கல்லூரிக்கு தவறாமல் வருகை புரிந்த மாணவிகளுக்கும், விளையாட்டில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.    பின்னர், மாணவிகள் சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  முன்னதாக, முதல்வர் ச. செந்தாரமரை லட்சுமி வரவேற்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai