Enable Javscript for better performance
மணல் திருட்டு: டிராக்டர் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசு நிலத்தில் மணல் திருடிய டிராக்டரை பறிமுதல் செய்த போலீஸார்,  இருவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். 
         வடுகபட்டி கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணகுமார் மற்றும் கிராம உதவியாளர் ஆகியோர், புதன்கிழமை அர்ச்சுனா நதி ஆற்றுப்படுகையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அரசு நிலத்தில் மணல் திருடிக் கொண்டிருந்துள்ளனர்.
         இது குறித்து நத்தம்பட்டி காவல் நிலையத்தில் கிருஷ்ணகுமார் புகார் செய்தார். அதன்பேரில், போலீஸார் சிவகாசி செவலூரைச் சேர்ந்த த. தங்கப்பாண்டி, ச. அழகப்பன் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai