Enable Javscript for better performance
ரயிலில் பயணி தவறவிட்ட ரூ.1 லட்சம் மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    ரயிலில் பயணி தவறவிட்ட ரூ. 1 லட்சம் பணத்தை விருதுநகர் ரயில்வே பாதுகாப்பு போலீஸார் மீட்டனர்.
           மதுரை- சென்னை செல்லும் ரயிலில் பிப்ரவரி 7 ஆம் தேதி செல்வதற்காக, சோப்ரா என்பவர் முன்பதிவு செய்துள்ளார். ஆனால், அவர் தவறுதலாக சென்னை சென்ற கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறியதாகக் கூறப்படுகிறது. அதன்பின்னர், அவர் தான் வேறு ரயிலில் ஏறியதை அறிந்து கீழே இறங்கி விட்டாராம். ஆனால், தான் கொண்டு வந்த கைப்பையை எடுக்க மறந்துவிட்டாராம். 
         இந்நிலையில், கன்னியாகுமரி ரயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு போலீஸார், அந்த கைப்பையை மீட்டு சோதனை நடத்தியுள்ளனர். அதில், ரூ. 1.02 லட்சம் பணம் மற்றும் கையெழுத்திடப்பட்ட ரூ. 1.06 லட்சம் மதிப்பிலான இரண்டு காசோலைகள் இருப்பதை அறிந்தனர். அதையடுத்து, மீட்கப்பட்ட பணம் மற்றும் கைப்பையை, விருதுநகர் ரயில்வே பாதுகாப்பு காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட போலீஸார் ஒப்படைத்துள்ளார்.
         அந்த பையில் இருந்த தங்கும் விடுதி ஒன்றின் செல்லிடப்பேசி எண்ணின் மூலம் சோப்ரா என்பவரை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். அவர் தற்போது புதுதில்லியில் இருப்பதால், வெள்ளிக்கிழமை ஆவணங்களை கொண்டு வந்து விருதுநகர் ரயில்வே காவல் நிலையத்தில் பணத்தை பெற்றுச் செல்வதாகத் தெரிவித்துள்ளதாக, ரயில்வே போலீஸார் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai