Enable Javscript for better performance
ராஜபாளையம் மலைப் பகுதியில் மழை- Dinamani

சுடச்சுட

    

    விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் புதன்கிழமை இரவு பெய்த  மழையின் காரணமாக, மலை அடிவாரத்தில் உள்ள ஆற்றுக்கு நீர் வரத் தொடங்கியுள்ளது. 
    ராஜபாளையம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாததன் காரணமாக வறட்சி நிலவியது. இதனால், மலை அடிவாரத்தில் உள்ள அய்யனார் கோயில் ஆற்றில் தண்ணீர் வரத்து இல்லாமல் வறண்டு காணப்பட்டது. இந் நிலையில், நகர் பகுதியில் புதன்கிழமை இரவு லேசான மழை பெய்தது.
    நள்ளிரவில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள நீராவி அருவி, முள்ளிக்கடவு ஆறு, வழுக்குப் பாறை மற்றும் மலட்டாறு உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால், வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் அடிவாரத்தில் உள்ள அய்யனார் கோயில் ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டது. அதையடுத்து, ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை மூலம் அதிகாலை 4 மணியில் இருந்து நகராட்சி குடிநீர்த் தேக்கத்துக்குச் செல்லும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. தேக்கத்தின் மொத்த கொள்ளளவான 20 அடியில், புதன்கிழமை வரை அணையில் 15.01அடி தண்ணீர் இருந்த நிலையில், வியாழக்கிழமை காலை 8 மணியளவில் 15.05 அடியாக உயர்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் மகிழ்சி அடைந்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai