Enable Javscript for better performance
விருதுநகரில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    விருதுநகரில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம்

    By DIN  |   Published on : 09th February 2018 02:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்வு பிப்ரவரி 11 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளதை அடுத்து, இத் தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
           இக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் தலைமை வகித்துப் பேசியதாவது: விருதுநகரில் 29 தேர்வு மையங்களில் 12,573 விண்ணப்பதாரர்களும், அருப்புக்கோட்டையில் 36 தேர்வு மையங்களில் 11,502 விண்ணப்பதாரர்களும், காரியாபட்டியில் 12 தேர்வு மையங்களில் 3,813 விண்ணப்பதாரர்களும், ராஜபாளையத்தில் 48 தேர்வு மையங்களில் 14,238 விண்ணப்பதாரர்களும், சாத்தூரில் 17 தேர்வு மையங்களில் 6,333 விண்ணப்பதாரர்களும், சிவகாசியில் 31 தேர்வு மையங்களில் 12,078 விண்ணப்பதாரர்களும், ஸ்ரீவில்லிப்புத்தூரில் 29 தேர்வு மையங்களில் 12,927 விண்ணப்பதாரர்களும், திருச்சுழியில் 11 தேர்வு மையங்களில் 1,953 விண்ணப்பதாரர்களும், வெம்பக்கோட்டை யில் ஒரு தேர்வு மையத்தில் 1,060 விண்ணப்பதாரர்களும் என மொத்தம் மாவட்டத்தில் 214 தேர்வு மையங்களில் 76,477 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
         தேர்வு நடைபெறும் மையங்கள் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளும் வகையில், 279 தலைமைக் கண்காணிப்பாளர்கள், 3,819 கண்காணிப்பு அலுவலர்கள், துணை வட்டாட்சியர் நிலையில் 41 மொபைல் பார்ட்டி மற்றும் துணை ஆட்சியர் நிலையில் 31 பறக்கும் படை அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். 
         தேர்வு எழுத வரும் விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் மையங்களுக்குச் செல்லும் கூடுதல் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தீயணைப்புத் துறையின் மூலம் மாவட்ட கருவூலத்திலும் மற்றும் அருப்புக்கோட்டை, ராஜபாளையம், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், காரியாபட்டி, திருச்சுழி மற்றும் சாத்தூர் ஆகிய சார்-நிலை கருவூலத்திலும் தேவையான தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தவும் மற்றும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திடவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
        தேர்வு மையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு தரை தளத்தில் இருக்கை ஒதுக்கீடு செய்யவேணடும். தேர்வு நடைபெறும் நேரங்களில் தடையில்லா மின்சாரம் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். மேலும், தேர்வு மையங்களின் முன்பாக தேர்வு எழுதுபவர்களின்  பதிவு எண்கள், தேர்வு அறைகளின் எண்கள் ஆகிய விவரங்கள் அடங்கிய அறிவிப்புப் பலகைகள் தெளிவாகவும், பெரிதாகவும் வைக்கப்பட வேண்டும் என்றார்.
    இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் இ. ஆனந்த குமார், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமிநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) செந்தில்குமாரி, வருவாய் கோட்டாட்சியர்கள் தினகரன் (சிவகாசி), மங்களபாலசுப்பிரமணியன் (சாத்தூர்), அனைத்து வட்டாட்சியர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai