Enable Javscript for better performance
விருதுநகரில் தொழிலாளர்கள் பெயரில் ரூ.250 கோடி வங்கிக் கடன் பெற்ற தொழில் நிறுவனம் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    விருதுநகரில் தொழிலாளர்கள் பெயரில் ரூ.250 கோடி வங்கிக் கடன் பெற்ற  தொழில் நிறுவனம் முற்றுகை

    By DIN  |   Published on : 09th February 2018 02:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகரில் தொழிலாளர்கள் பெயரில் வங்கிக் கடன் பெற்று ரூ. 250 கோடி வரை மோசடி செய்ததாக, சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனத்தை தொழிலாளர்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.
    விருதுநகர் பேராலி சாலையில் பிரல தனியார் தொழில் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் மூலம் பருப்பு, மல்லி, காபி கொட்டை உள்ளிட்ட பொருள்கள் பல்வேறு மாவட்டங்களுக்கும் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
    இந்நிலையில், இந்த நிறுவனத்தின் நிர்வாகி, தொழிலாளர்கள் பெயரில் பருப்பு உள்ளிட்ட பொருள்களை தேனி, பெரியகுளம் , ஜெயமங்கலம் உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசுடைமை வங்கிகளில் அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளார். இதில், சுமார் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பெயரில் வங்கிகளில் தலா ரூ. 50 லட்சம் முதல் ரூ. 60 லட்சம் வரை கடன் பெற்றுள்ளாராம். 
          ஆனால், வங்கியில் வாங்கிய கடன் தொகையை திருப்பி செலுத்தவில்லையாம். இதனால், தொழிலாளர்கள் பெயரில் நாளிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்டவர்களுக்கு வங்கி சார்பில் ஏற்கெனவே எச்சரிக்கை நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது.
     எனவே, பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் வியாழக்கிழமை சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனத்தை முற்றுகையிட்டனர். தகவலறிந்து வந்த கிழக்கு காவல் நிலைய போலீஸார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 
    அப்போது, அவர்கள் சுமார் ரூ. 250 கோடி வரை தங்களது பெயரில் மோசடி செய்யப்பட்டிருப்பதாக போலீஸாரிடம் தெரிவித்தனர்.இது குறித்து பொருளாதாரக் குற்றப் பிரிவில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவிக்க போலீஸார் அறிவுறுத்தினர். அதையடுத்து, முற்றுகையில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai