Enable Javscript for better performance
ஸ்ரீவிலி.யில் மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீவிலி.யில் மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் ஆய்வு

    By DIN  |   Published on : 09th February 2018 02:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டால், விரைந்து சென்று பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
        கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மத்திய அரசின் பாதுகாப்புப் படையினர், புதுச்சேரி, கேரளம், கர்நாடகம், தமிழகம் ஆகிய மாநிலங்களில் உள்ள முக்கிய இடங்களில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டால், எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.     மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மிகத் தலமான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு பாதுகாப்புப் படையினர் வருகை தந்தனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் பதற்றமான சூழ்நிலை ஏற்படும் இடங்களுக்கு விரைந்து சென்று பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். 
        இதற்காக, ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் உள்ள சாலைகள், விரைந்து செல்வதற்கான போக்குவரத்து வசதிகள், கோயம்புத்தூரிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வருவதற்கான கால அளவு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து மத்திய பாதுகாப்புப் படைப் பிரிவினர், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் கோயில் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai