Enable Javscript for better performance
ஆவியூர் அரசுப் பள்ளிக்கு சீர்வரிசை பொருள்கள் வழங்கிய கிராம மக்கள்- Dinamani

சுடச்சுட

    

    ஆவியூர் அரசுப் பள்ளிக்கு சீர்வரிசை பொருள்கள் வழங்கிய கிராம மக்கள்

    By DIN  |   Published on : 24th March 2018 12:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காரியாபட்டி அருகே ஆவியூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கு தேவையான பொருள்களை சீர் வரிசையாக கொண்டு வந்து கிராம மக்கள் தலைமை ஆசிரியரிடம் வெள்ளிக்கிழமை வழங்கினர்.
    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஒன்றியத்தில் ஆவியூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி உள்ளது. இங்கு சுமார் 200 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளிக்கு தேவையான பீரோ, மின்விசிறி, பாத்திரம், நாற்காலி, மேஜை ஆகிய பொருட்களை, அக்கிராம மக்கள் தங்கள் சொந்த பணத்தில் வாங்கியுள்ளனர். இதை, வெள்ளிக்கிழமை ஊர்வலமாக கொண்டு வந்து பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயண்ணனிடம் வழங்கினர். முன்னதாக சீர் வரிசை பொருட்களை கொண்டு வந்த கிராம மக்களை மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் கல்வி குழு தலைவர் முத்துராக்கு உள்ளிட்ட அக்கிராமத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    நரிக்குடி: திருச்சுழி வட்டம் நரிக்குடியில் மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
    இப்பள்ளியில் படித்து பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து பள்ளிக்குத் தேவையான பீரோ, கணினி, நாற்காலி, மேசை மற்றும் இன்வெட்டர் போன்ற ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்களை வாங்கினர். இதனை தலைமையாசிரியை கி.பாரதி மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சேதுபதி ஆகியோரிடம் வெள்ளிக்கிழமை வழங்கினர்.
    அதன் பின்னர், பள்ளி சார்பில் பழைய மாணவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai