Enable Javscript for better performance
இருக்கன்குடி கோயிலுக்கு செல்லும் சாலையை சீரமைக்க கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    இருக்கன்குடி கோயிலுக்கு செல்லும் சாலையை சீரமைக்க கோரிக்கை

    By DIN  |   Published on : 24th March 2018 12:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இருக்கன்குடி அணை வழியாக, மாரியம்மன்கோயிலுக்கு செல்லும் சாலையை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் பழமை வாய்ந்த மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதியிலிருந்தும் பக்தர்கள் வருகின்றனர். சாத்தூரில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் கோயில் அமைந்துள்ளது. கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் இருக்கன்குடி அணையை கடந்து செல்ல வேண்டும். இதனால் சுமார் ஒரு கிலோ மீட்டர் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சாலையை கடந்து செல்ல வேண்டும். இந்த ஒரு கிலோ மீட்டர் சாலை சேதமடைந்த நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். இந்த சாலையை சீரமைக்க பொதுபணித்துறையினர் முன்வர வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில்: சாலையை சீரமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai