Enable Javscript for better performance
கலசலிங்கம் பல்கலை.யில் சர்வதேச மாநாடு  அமெரிக்க ஆராய்ச்சியாளர் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    கலசலிங்கம் பல்கலை.யில் சர்வதேச மாநாடு  அமெரிக்க ஆராய்ச்சியாளர் பங்கேற்பு

    By DIN  |   Published on : 24th March 2018 12:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் கணினி பயன்பாட்டுத்துறை சார்பில், இரு நாள் சர்வதேச கணினி மென்பொருள் நுட்ப மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு துணைத் தலைவர் எஸ்.சசிஆனந்த் தலைமை வகித்தார். துறைத் தலைவர் டி.அமுதகுகா வரவேற்றார். துணைவேந்தர் எஸ்.சரவணசங்கர், டீன் தீபலட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.
    அமெரிக்கா, ஹார்வார்டு பிஸினஸ் ஸ்கூல் நிர்வாக இயக்குநர் ஜாசன்பெர்கர் மாநாட்டை தொடங்கி வைத்து, தற்போதைய பணப்பரிமாற்றம் பாதுகாப்பான முறையில் நடைபெறுவதற்கான புதிய மென்பொருள் குறித்தும், அமெரிக்காவில் நடைபெற்று வரும் நுண்ணறிவு தொழில் நுட்ப ஆராய்ச்சிகள் குறித்தும் பேசினார்.
    தாய்லாந்து, கிங் முங்குட்ஸ் பல்கலைக்கழக டீன் சுனந்தா சோட்ஸி, தாய்லாந்து கிங் முங்குட்ஸ் பல்கலை பேராசிரியை சிரனி நுச்சிட் மற்றும் பல நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கலந்துகொண்டு இணைய தளம் மூலமாக பொருள்களை விற்பனை செய்யும் முறைகள் குறித்து விளக்கினர்.
    மாணவர்கள், ஆசிரியர்கள் நாட்டின் பல்வேறு கல்லூரிகளிலிருந்து வந்திருந்து மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர். பேராசியர் எஸ்.ராம்குமார் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai