Enable Javscript for better performance
சாத்தூரில் சாலையோர குப்பைகளால் சுகாதாரக்கேடு- Dinamani

சுடச்சுட

    

    சாத்தூர் நகர் மற்றும் கிராம பகுதிகளில் சாலை ஓரத்தில் கொட்டபடும் குப்பைகளால் சுகாதாரகேடு ஏற்பட்டுள்ளது.
    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகர், வெம்பக்கோட்டை, செவல்பட்டி,
    ஏழாயிரம்பண்ணை, படந்தால், ரெங்கப்பநாய்க்கன்பட்டி காலனி, ஒத்தையால், மேட்டுபட்டி, அமீர்பாளையம் ஆகிய பஞ்சாயத்துகளில் முறையாக குப்பைதொட்டிகளை வைக்கப்படவில்லை.
    அதனால் பொதுமக்கள் சாலையோரங்களில் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் இந்த பகுதிகளில் சுகாதாரசீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்த குப்பைகளில் அதிகளவில் தடைசெய்யபட்ட பாலித்தீன் குப்பைகள் தான் உள்ளன.
    இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள்கூறுகையில்: அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தான் சாலையில் குப்பைகளை கொட்டுகின்றனர். பலமுறை எச்சரிக்கை விடுத்தும் பயனில்லை. மேலும் அந்தந்த பகுதிகளில் குப்பை தொட்டிகள் அமைத்து தர விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai