Enable Javscript for better performance
சிவகாசியில் கோயில் வாசல் முன் ஓடும் கழிவுநீரால் பக்தர்கள் அவதி- Dinamani

சுடச்சுட

    

    சிவகாசியில் கோயில் வாசல் முன் ஓடும் கழிவுநீரால் பக்தர்கள் அவதி

    By DIN  |   Published on : 24th March 2018 12:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிவகாசியில் காமாட்சியம்மன் கோயில் முன்பு ஓடும் கழிவு நீரால் பக்தர்கள் அவதியடைந்து வருகிறார்கள்.
    சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி முன்பு காமாட்சியம்மன் கோயில் உள்ளது. சிவகாசி தண்ணீர் மேல்நிலைத் தொட்டிப் பகுதியிலிருந்தும், பி.எஸ்.ஆர். சாலையிலிருந்தும் கட்டப்பட்டுள்ள கழிவு நீர்வாய்க்கால், கோயிலின் முன்பு சென்று, பின்னர் பிரதான கழிவு நீர் வாய்க்காலை சென்றடைகிறது.
    இந்நிலையில் பி.எஸ்.ஆர். சாலையும், ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையையும் இணைக்கும் பகுதியில் உள்ள கழிவு நீர்வாய்கால் பல மாதங்களாக தேங்கி உள்ளது. இதனால் அந்த வாய்காலில் ஓடும் கழிவு நீர் சாலைக்கு வந்துவிடுகிறது. மேலும் அந்த வாய்க்காலில் பல இடங்களில் அடைப்பு உள்ளது. இதனால் வாய்காலில் கழிவுநீர் சீராக செல்வதில்லை. தற்போது கழிவு நீர் அதிகமாக செல்வதால், வாய்க்காலை விட்டு மேலே தண்ணீர் சென்று கோயிலின் வாசல் வழியே கழிவு நீர் செல்கிறது. இதனால் கோயிலுக்குள் செல்லும் பக்தர்கள் மிகுந்த பக்தர்கள் வேதனை அடைந்து வருகிறார்கள். எனவே நகராட்சி நிர்வாகம் கழிவு நீர் வாய்காலை சீரமைத்து, தண்ணீர் சீராக செல்லும்படி ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai