Enable Javscript for better performance
சிவகாசி இ.எஸ்.ஐ.மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை: நோயாளிகள் அவதி- Dinamani

சுடச்சுட

    

    சிவகாசி இ.எஸ்.ஐ.மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை: நோயாளிகள் அவதி

    By DIN  |   Published on : 24th March 2018 12:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிவகாசி இ.எஸ்.ஐ.மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
    சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பட்டாசு, தீப்பெட்டி, ஆப்செட் அச்சு, நூற்பாலைகள் மற்றும் பல தொழிற்சாலைகள் உள்ளன. இதில் லட்சகணக்கானோர் வேலை செய்து வருகிறார்கள். இப்பகுதி தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்க இ.எஸ்.ஐ.மருத்துவமனை உள்ளது.
    இந்த மருத்துவமனைக்கு தினசரி 200 முதல் 250 பேர் வரை புறநோயாளிகளாக வந்து செல்கிறார்கள். உள்நோயாளிகளாக சுமார் 100 பேர் வரை இருக்கிறார்கள்.
    இந்த மருத்தவமனைக்கு மொத்தம் 11 மருத்துவர்களும் 5 சிறப்பு மருத்துவர்களும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    இந்நிலையில் தற்போது 8 மருத்துவர்களே பணியாற்றி வருகின்றனர். இதனால் புறநோயாளிகள்அதிக நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
    பல் மருத்துவர், அறுவைசிகிச்சை மருத்துவர், பொதுமருத்துவர், மகப்பேறு மருத்துவர், எலும்பு மருத்துவர் என 5 சிறப்பு மருத்துவர்கள் இந்த மருத்துவமனையில் இருக்க வேண்டும். ஆனால் மகப்பேறு மருத்துவர் மற்றும் அறுவைசிகிச்சை மருத்துவர்கள் என இரு மருத்துவர்கள் மட்டுமே தற்போது பணியில் உள்ளனர்.
    இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தாமதமாகிறது. எனவே இந்த மருத்துவமனைக்கு தேவையான மருத்துவர்களை அரசு நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    இது குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் அசோக் கூறியதாவது: மருத்துவர்களின் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி அரசுக்கு கடிதம் எழுதியுள்ளேம். மருத்துவமனை தொடர்பாக நடைபெறும் கூட்டங்களிலும் மருத்துவர்களை நியமிக்ககோரி கூறிவருகிறோம் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai