Enable Javscript for better performance
'பட்டாசு ஆலைகளில் விபத்து ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும்'- Dinamani

சுடச்சுட

    

    'பட்டாசு ஆலைகளில் விபத்து ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும்'

    By DIN  |   Published on : 24th March 2018 12:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளை விபத்து ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம் தெரிவித்தார்.
    விருதுநகர் மாவட்ட பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டம் ஆட்சியர் அ. சிவஞானம் தலைமையில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
    அப்போது அவர் பேசியதாவது, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் விபத்துக்களை தடுக்கும் வகையில் அத்தியாவசியமாக சில நிபந்தனைகளை உரிமம் வழங்கும் படிவங்களில் கூடுதலாக சேர்ப்பது குறித்து, பணி புரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து பட்டாசு உற்பத்தியாளர்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். அதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பட்டாசு தயாரிக்கும் போது மருந்து கலவைக்கு நிலத்தடி நீரை பயன்படுத்தினால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை பயன்படுத்த வேண்டும். மேலும் ஆலைகளில் பயிற்சி பெற்ற போர்மென் மற்றும் பணியாளர்களை மட்டுமே பணியில் சேர்க்க வேண்டும். தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கையுறைகள், ரப்பர் சீட், தாமிர மின்தகடு மற்றும் தொழிற்சாலை பாதுகாப்பு மையத்தால் பரிந்துரை செய்யப்பட்டுள்ள அத்தியாவசிய உபகரணங்கள் வைத்திருக்க வேண்டும்.
    இவை அனைத்தும் பட்டாசு ஆலைகளில் உள்ளதா என்பதை ஆய்வு செய்த பின்னரே ஆலைகளுக்கு உரிமம் வழங்க வேண்டும். விபத்து ஏற்படுத்த கூடிய இரும்பினால் ஆன தராசு ஆணி, இடுக்கி போன்றவை இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும், பட்டாசு உற்பத்திக்கான சல்பர் முதலான மூலப்பொருட்கள் இருப்பு மற்றும் பயன்படுத்தப்பட்ட அளவு பதிவேடுகளில் பதிவு செய்ய வேண்டும் என்றார் அவர்.
    இக்கூட்டத்தில் இணை இயக்குனர்(தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கம்) பாலகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ) செந்தில்குமாரி, அனைத்து கோட்டாட்சியர், வட்டாட்சியர்கள், தீயணைப்பு துறையினர், பட்டாசு உரிமையாளர் சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai