Enable Javscript for better performance
வாகன விபத்தில் நிரந்தர ஊனமுற்றவருக்கு ரூ.30.71 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    வாகன விபத்தில் நிரந்தர ஊனமுற்றவருக்கு ரூ.30.71 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவு

    By DIN  |   Published on : 24th March 2018 12:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விபத்தில் நிரந்தர ஊனமுற்றவருக்கு, இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.30.71 லட்சம் நஷ்டஈடு வழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
    ராஜபாளையம், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் பவுன்துரை (37). இவர் 2009-ம் ஆண்டு ஜூலை 12-ம் தேதி தனது நண்பர்களுடன் குற்றாலத்திற்கு குளிக்கச் சென்றுள்ளார். பழையகுற்றாலம் சாலையில் நடந்து சென்றபோது, பின்னால் வந்த வேன் பவுன்துரை மீது மோதியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த பவுன்துரை பல்வேறு சிகிச்சை பெற்றும், நிரந்தர ஊனம் அடைந்தார்.
    இதனையடுத்து பவுன்துரை நஷ்டஈடு கோரி, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சார்பு நீதிமன்றம் மற்றும் மோட்டார் வாகன விபத்துக்கள் இழப்பீடு கோரும் உரிமை தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.கதிரவன், நெல்லை, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் பவுன்துரைக்கு ரூ.30.71 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai