Enable Javscript for better performance
விருதுநகரில் நகராட்சி ஊழியர்கள் போல் நடித்து 38 பவுன் நகை திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    விருதுநகரில் நகராட்சி ஊழியர்கள் போல் நடித்து 38 பவுன் நகை திருட்டு

    By DIN  |   Published on : 24th March 2018 12:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகரில் நகராட்சி ஊழியர்கள் எனக்கூறி, வீட்டிற்கு வந்து 38 பவுன் நகைகளை திருடிச் சென்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    விருதுநகர் ஐ.சி.ஏ. காலனியை சேர்ந்தவர் சக்திவேல் (75),இவரது மனைவி செல்வராணி(67). இங்கு கடந்த புதன்கிழமை நகராட்சி ஊழியர்கள் என்று கூறி 3 பேர் வந்துள்ளனர். பாதாள சாக்கடை இணைப்புக்கு பணம் கட்டி விட்டீர்களா என்று கேட்டுள்ளனர். மேலும் வீட்டில் உள்ள கழிப்பறைகளை பார்வையிடுவதாக கூறி, வீட்டிற்குள் சென்றுள்ளனர். அப்போது பீரோவில் இருந்த 38 பவுன் நகைகளை அவர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
    இதுகுறித்து சக்திவேல் அளித்த புகாரின் பேரில் விருதுநகர் கிழக்கு போலீஸார் வழக்குபதிந்து மூன்று பேரை தேடி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai