Enable Javscript for better performance
ஸ்ரீவிலி. அருகே சேதமடைந்த கழிவுநீர் கால்வாய் பாலத்தை சீரமைக்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீவிலி. அருகே சேதமடைந்த கழிவுநீர் கால்வாய் பாலத்தை சீரமைக்க வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 24th March 2018 12:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கழிவு நீர் கால்வாய் பாலம் சேதம் அடைந்துள்ளதால், பொருள்களை கொண்டு செல்ல இயலாத நிலையில் தெரு ஓரத்தில் ரேஷன் கடை செயல்படுகிறது. இந்த பாலத்தை உடனே சீரமைக்க இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நூர்சாகிபுரம் கிராமத்தில் பிரதான சாலையான வடக்குத் தெருவிற்கு வர ஒரு கழிவு நீர் கால்வாய் பாலத்தை கடந்து வர வேண்டும். தற்போது இந்த சிறிய பாலம் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. இதனால் கனரக வாகனங்கள், ஆட்டோ மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்கள் வடக்கு தெருவிற்குள் வர இயலவில்லை. இதனால் நூர்சாகிபுரம் பொது மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.
    குடிமைப் பொருள் வாகனம் செல்ல முடியாத காரணத்தால் நூர்சாகிபுரம் ரேஷன் கடைக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்ல முடியவில்லை.
    இதனால் நூர்சாகிபுரம் இந்து தொடக்கப் பள்ளி அருகே ரேஷன் கடை, தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இதனால், ரேசன் கடை பணியாளர்களும், பொதுமக்களும் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
    மேலும் நூர்சாகிபுரத்தில் பங்குனிப் பொங்கல் திருவிழா வரும் ஏப்ரல் 8 மற்றும் 9-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த பாலம் சேதமடைந்துள்ளதால் காளியம்மன், மாரியம்மன் கோவில் சப்பரம் ஊர் சுற்றி வர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
    இந்தப் பாலத்தை உடனடியாக சீரமைக்க இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai