Enable Javscript for better performance
அரசுப் பேருந்து - இருசக்கர வாகனம் மோதல்: கட்டட தொழிலாளர்கள் 2 பேர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    அரசுப் பேருந்து - இருசக்கர வாகனம் மோதல்: கட்டட தொழிலாளர்கள் 2 பேர் சாவு

    By DIN  |   Published on : 31st March 2018 01:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் ஆர்.எஸ். நகர் அருகே அரசுப் பேருந்து - இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் கட்டட தொழிலாளர்கள் 2 பேர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனர். 
     விருதுநகர் அருகே உள்ள செந்தில்குடியைச் சேர்ந்தவர் சத்தியேந்திரன் (38). விருதுநகர் அல்லம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் மகன் மாரிக்கனி (18). கட்டட தொழிலாளர்களான இவர்கள் இருவரும் பாலவநத்தம் பகுதியிலிருந்து விருதுநகர் நோக்கி வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.
     விருதுநகர் ஆர்.எஸ். நகர் அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக விருதுநகர்- அருப்புக்கோட்டை சென்ற அரசுப் பேருந்து மீது மோதியது. 
    இதில், சத்தியேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த துணை காவல் கண்காணிப்பாளர் லெட்சுமணன், மாரிக்கனியை மீட்டு, விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
    முதலுதவி சிகிச்சைக்கு பின், மாரிக்கனியை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அரசுப் பேருந்து ஓட்டுநர் முருகனிடம் விருதுநகர் கிழக்கு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai