Enable Javscript for better performance
அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா: ஏப்.3-இல் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா: ஏப்.3-இல் தொடக்கம்

    By DIN  |   Published on : 31st March 2018 01:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா வரும் 3-ஆம் தேதி தொடங்குகிறது.
     இதுதொடர்பாக அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை பொதுஅபிவிருத்தி டிரஸ்ட் நிர்வாகத்தினர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
     முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா வரும் 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இத்திருவிழா 15 நாள்கள் நடைபெறும். தினமும் இரவு 7.35 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தீபதூப ஆராதனைகள் நடைபெறும்.
     ரிஷப வாகனம், யானை வாகனம், காமதேனு வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளுகிறார். 7-ஆம் நாள் திருவிழாவில் சூரசம்ஹார நிகழ்ச்சி, பொங்கல் திருவிழாவும், மறுநாள் பிரார்த்தனைப் பூக்குழித் திருவிழாவும் நடைபெறும்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai