Enable Javscript for better performance
ஆத்திப்பட்டியில் சாலையோரம்  சாய்ந்து விழும் நிலையில் ஆபத்தான மரம்: அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்க- Dinamani

சுடச்சுட

    

    ஆத்திப்பட்டியில் சாலையோரம்  சாய்ந்து விழும் நிலையில் ஆபத்தான மரம்: அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

    By DIN  |   Published on : 31st March 2018 01:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப்பட்டி கிராமத்தில் பிரதான சாலையோரம் சாய்ந்த நிலையில் உள்ள மரத்தால் அப்பகுதியினர் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்-பார்த்திபனூர் மாநில நெடுஞ்சாலையில் ஆத்திப்பட்டி  ராஜீவ் நகர் உள்ளது. விருதுநகர் மாவட்டத்தை ராமநாதபுரம் மாவட்டத்துடன் இணைக்கும் முக்கிய சாலையாக இருப்பதால் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இவ்வழியே சென்றுவருகின்றன. போக்குவரத்து அதிகம் உள்ள இச்சாலையில் ஒரு தனியார் நிறுவன வளாகச் சுவர் அருகே உள்ள பழைமையான மரம், 45 டிகிரி வரை சாய்ந்து கீழே விழும் நிலையில் உள்ளது.
     இந்த மரத்தின் ஒரு பெரியகிளை அண்மையில் பெய்த காற்றுடன் கூடிய மழையில் முறிந்து சாலையில் விழுந்து விட்டது. அந்த நேரத்தில் சாலையில் வாகனங்கள் வராததால் அதிர்ஷ்டவசமாக விபத்து ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
     இந்நிலையில், முறிந்த மரக்கிளையை அப்புறப்படுத்திய ஆத்திப்பட்டி ஊராட்சி நிர்வாகத்தினர், சாய்ந்த மரத்தை அப்புறப்படுத்தவில்லை. இந்த மரம் எந்நேரமும் கீழே விழலாம் என்பதால், ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர், அந்த மரத்தை உடனடியாக வெட்டி, அப்புறப்படுத்த சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai