Enable Javscript for better performance
கருந்திரி கடத்தல்: 2 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    சாத்தூர் அருகே காரில் கருந்திரி கடத்திச் சென்ற 2 பேரை வெம்பக்கோட்டை போலீஸார் வியாழக்கிழமை இரவு கைது செய்தனர்.
     சாத்தூர் அருகே தாயில்பட்டி, ராமலிங்காபுரம் பகுதிகளிலிருந்து கருந்திரி அனுமதியின்றி தயாரிக்கபட்டு கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் கடத்தப்படுவதாக வெம்பக்கோட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல் உதவி ஆய்வாளர் ஞானசேகரன் மற்றும் போலீஸார் மடத்துபட்டி பகுதியில் வியாழக்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். 
    அப்போது, அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர். அதில், பட்டாசுக்கு தேவையான கருந்திரியை அனுமதியின்றி கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றை கடத்தி வந்த தாயில்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் (37), ராமலிங்காபுரத்தைச் சேர்ந்த முனியசாமி (24) ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிந்து, கைது செய்தனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai