Enable Javscript for better performance
காமராசர் விருது பெற்ற பள்ளி மாணவருக்கு பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    தமிழக அரசின் பெருந்தலைவர் காமராசர் விருதுபெற்ற ராஜபாளையம் ந.அ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி மாணவரை பள்ளியின் செயலர் வெள்ளிக்கிழமை பாராட்டினார்.
     தமிழக அரசு கடந்த 2016 - 17 ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்ற 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களில் கல்வி மற்றும் தனித்திறன்களில் சிறப்பிடம் பெறும் மாணவர்களுக்கு காமராசர் விருது வழங்கிச் சிறப்பித்தது.
     அதில், ராஜபாளையம்  ந.அ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு முடித்த மாணவர் வி.மனோஜ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டு ஊக்கத்தொகை ரூ. 20 ஆயிரமும் நற்சான்றிதழும் பெற்றுள்ளார். பரிசுபெற்ற மாணவரை வெள்ளிக்கிழமை பள்ளிச் செயலர்  என்.ஆர்.அழகராஜா பாராட்டி கெளரவித்தார். அப்போது, பள்ளியின் தலைமையாசிரியர் பி.ஏ.ரமேஷ், ஆசிரியர்கள் உடனிருந்தனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai