Enable Javscript for better performance
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க காங்கிரஸ் குரல் கொடுக்காதது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க காங்கிரஸ் குரல் கொடுக்காதது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி

    By DIN  |   Published on : 31st March 2018 01:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்தியாவை ஆள நினைக்கும் காங்கிரஸ் கட்சி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க குரல் கொடுக்காதது ஏன்? என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கேள்வியெழுப்பியுள்ளார். 
      விருதுநகர் அருகே உள்ள பட்டம்புதூர் பகுதியில் புதிய தமிழகம் கட்சி சார்பில் மே., 6-இல் நடைபெறவுள்ள மாநாட்டுக்கான இடத்தை பார்வையிட வெள்ளிக்கிழமை வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காதது, தமிழக மக்களுக்கு மிக பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. காவிரி நீர் என்பது காவிரி டெல்டா விவசாயிகளுக்கான பிறப்புரிமை. ஒவ்வொரு கட்சிக்கும் போராட்டம் நடத்த உரிமை உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைய ஆளும் கட்சி நடத்தும் அனைத்து கட்சி கூட்டமே பயனளிக்கும். திமுக நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்தினால் எந்த பயனும் இல்லை. 
     அதேபோல் ஆளும் கட்சிநடத்த உள்ள உண்ணாவிரத போராட்டங்களை தவிர்த்து, மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் வேறு விதமான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். தமிழக மக்களின் வாழ்வாதரத்தை பாதுகாக்க அரசியல் கட்சிகள் ஒரு வெற்று அறிக்கையாக இல்லாமல் மனப்பூர்வமான போராட்டங்கள் நடத்த வேண்டும். இந்தியாவை ஆள நினைக்கும் காங்கிரஸ் கட்சி ஏன் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு தமிழக மக்களுக்காக குரல் கொடுக்க மறுக்கிறது? தமிழக மக்கள் மீது வேற்று மொழியை திணிக்கக் கூடாது என கூறும் ராகுல்காந்தி, ஏன் உச்ச நீதிமன்ற தீர்ப்பை தமிழக மக்களுக்காக முழுமையாக நிறைவேற்ற கோரி நாடாளுமன்றத்தை முடக்க கூடாது? தமிழகத்தில் அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் களைப்படைந்த குதிரைகள். இவர்களால், இனிமேல் எந்த நல்ல திட்டமும் வராது, செயல்படுத்தவும் மாட்டார்கள் என்றார் அவர். 
    பின்னர், விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்று பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கிருஷ்ணசாமி ஆறுதல் தெரிவித்தார்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai