Enable Javscript for better performance
சாத்தூர் மயானத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த பொதுமக்கள் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    சாத்தூர் மயானத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

    By DIN  |   Published on : 31st March 2018 01:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாத்தூர் மயானத்துக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர நகராட்சி நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    விருதுநகர் மாவட்டம், சாத்தூர் நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இறப்பவர்களை சாத்தூர் நகராட்சி சார்பில், வைப்பாற்று ரயில்வே பாலம் அருகே அமைக்கப்பட்டுள்ள மயானதில் இறுதி சடங்குகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த மயானத்துக்கு நகராட்சி நிர்வாகம் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை. மயானத்துக்கு செல்லும் சாலையில் கற்கள் பெயர்ந்து மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. இங்கு குளிப்பதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள குழாய்கள் பராமரிப்பின்றி உள்ளது.  மேலும் சாத்தூர் நகராட்சியில் சேகரிக்கபடும் குப்பைகளை மயானம் அருகில் உள்ள குப்பை கிடங்கிற்குள் கொட்டாமல், மயான சாலையிலேயே கொட்டி விட்டு செல்கின்றனர். இதனை நகராட்சி அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை.
     எனவே, சாத்தூர் மயானத்துக்கு அடிப்படை வசதிகளை செய்து, நவீன முறையில் மின்மயானம் அல்லது எரிவாயு தகன மேடை அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai