Enable Javscript for better performance
சிதம்பராபுரத்தில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்- Dinamani

சுடச்சுட

    

    அருப்புக்கோட்டை வட்டம், சிதம்பராபுரம் கிராமத்தில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
     சென்னை அண்ணா பல்கலைக்கழகமும், அருப்புக்கோட்டை ஸ்ரீசெளடாம்பிகா பொறியியல் கல்லூரியும் இணைந்து நடத்திய இந்த முகாம் கடந்த ஒரு வாரமாக நடைபெற்றது. தொடக்க நாள் நிகழ்ச்சிக்கு கல்லூரிச் செயலாளர் பாஸ்கரராஜன், பொருளாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் தலைமை வகித்தனர். 
    கல்லூரி முதல்வர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக அருப்புக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகமூர்த்தி, மாரியம்மாள் கலந்து கொண்டனர்.
     இதில், மரக்கன்று நடுதல், ரத்ததான முகாம், கண் சிகிச்சை முகாம், இசேவை முகாம், பொது மருத்துவ முகாம் ஆகியன நடைபெற்றது.  முகாமில் பொறியியல் கல்லூரியின் நிர்வாக உறுப்பினர்கள்,கிராம முக்கியஸ்தர்கள் பாலகிருஷ்ணன், சீனிராஜ், ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் ரமேஷ்குமார், எலிசபெத் ராணி, கல்லூரியின் மக்கள் தொடர்புத் துறை அலுவலர் ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai