Enable Javscript for better performance
தாம்பரம் -ராஜபாளையம் - கொல்லம் இடையே சிறப்பு ரயில் இயக்கம்- Dinamani

சுடச்சுட

    

    தாம்பரம் -ராஜபாளையம் - கொல்லம் இடையே சிறப்பு ரயில் இயக்கம்

    By DIN  |   Published on : 31st March 2018 01:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதிய ஆரியங்காவு இடமண் அகல ரயில் பாதை பணிகள் முடிந்த நிலையில் முதல் முறையாக தாம்பரம் -ராஜபாளையம் - கொல்லம் சிறப்பு கட்டண ரயில் சனிக்கிழமை இயக்கப்படுகிறது.
     மார்ச் 30 (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறபட்டு இந்த ரயில் விழுப்புரம், திருச்சி, மதுரை, விருதுநகர்  வழியாக ராஜபாளையத்துக்கு மார்ச் 31 அதிகாலை 4 மணிக்கு வந்தடைகிறது.
     பின்னர், தென்காசி, செங்கோட்டை, தென்மலை, புனலூர்/ கொட்ட ரக்கரா வழியாக காலை 10.30 மணிக்கு கொல்லம் செல்கிறது. மறுமார்க்கத்தில் மார்ச் 31 (சனிக்கிழமை) கொல்லத்தில் மதியம் ஒரு மணிக்கு புறப்பட்டு அதே வழித்தடத்தில் ராஜபாளையத்துக்கு மாலை 6.28-க்கு வந்து சேர்கிறது.
     பின்னர், மறுநாள் காலை 5 மணிக்கு தாம்பரத்துக்கு  சென்றடைகிறது. இந்த ரயில் ஒருநாள் மட்டுமே இயக்கப்படுகிறது. விருதுநகர்-ராஜபாளையம்-தென்காசி- கொல்லம் அகல ரயில் பாதை முறைப்படி திறக்கப்பட்டு, இந்த வழித்தடத்தில் புதிய ரயில்கள் இயக்கப்படவுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai