Enable Javscript for better performance
திருச்சுழி-பார்த்திபனூர் சாலையை சீரமைக்க வேண்டும்: வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    திருச்சுழி-பார்த்திபனூர் சாலையை சீரமைக்க வேண்டும்: வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 31st March 2018 01:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்சுழி-பார்த்திபனூர் சாலை மிகவும் சேதமடைந்துள்ளதால், இச்சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள்  வலியுறுத்தியுள்ளனர்.
    விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழியில் பிரசித்தி பெற்ற ரமண மகரிஷி கோயில் உள்ளது. தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர். பின்பு, இங்கிருந்து பார்த்திபனூர் வழியாக ராமேசுவரத்துக்கு செல்கின்றனர். ஆனால்,  திருச்சுழி- நரிக்குடி வழியாக பார்த்திபனூர் வரையுள்ள சுமார் 38 கி.மீ. சாலையானது மிகவும் மோசமாக உள்ளது. 
    பல இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால், அவ்வழியே பேருந்து, கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் கடும் அவதிக்குள்ளாகின்றனர். 
    சாலை பழுது காரணமாக, சிலர் இச்சாலையை தவிர்த்து, மீண்டும் அருப்புக்கோட்டை அருகே வந்து கல்லூரணி, க.விலக்கு, கமுதி வழியாக சுற்றிச் செல்கின்றனர். இதனால், கூடுதல் நேரம், பண விரயம் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, திருச்சுழி-பார்த்திபனூர் சாலையை உடனடியாக சீரமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai