Enable Javscript for better performance
பங்குனி உத்திரம்: கோயில்களில் சிறப்பு வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    பங்குனி உத்திரவிழாவை முன்னிட்டு, ராஜபாளையம் பகுதி கோயில்களில் பக்தர்கள் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தினர்.
     ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன்கோயிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். ராஜபாளையம் மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோயிலில் முருகருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடைபெற்றது.
     இங்குள்ள ஐயப்பன் கோயிலில் ஐயப்பன் அவதரித்த பங்குனி உத்திர தினத்தில் சிறப்பு அபிஷேகம், பூஜை விமரிசையாக நடைபெற்றது. பக்தர்கள் குலதெய்வமாக வணங்கும் கோயில்களில் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai