Enable Javscript for better performance
பத்தாம் வகுப்பு மாணவி தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த முத்துலட்சுமி மகள் செல்வரதி (15). இவர், சிவகாசியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆங்கிலம் இரண்டாம் தாள் சரியாக எழுதவில்லை எனத் தெரிகிறது.
    இந்நிலையில் வீட்டுக்கு வந்த செல்வரதி, மண்ணெண்னய் ஊற்றி தீக்குளித்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு செல்வரதி வெள்ளிகிழமை உயிரிழந்தார். இதுகுறித்து வெம்பக்கோட்டை காவல் நிலையத்தில் முத்துலட்சுமி அளித்த புகாரின்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai