Enable Javscript for better performance
புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை- Dinamani

சுடச்சுட

    

    விருதுநகரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் புனித வெள்ளியையொட்டி, சிறப்பு ஆராதனை மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது. இதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
     இயேசு கிறிஸ்து சிலுவை சாவுக்கு ஒப்பு கொடுக்கப்பட்டு தலையில் முள் கிரீடம் சூட்டப்பட்டு கொல்கதா மலைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிலுவை சுமந்து சென்றதிலிருந்து அவர் மரணம் அடையும் வரை ஏழு திருவசனங்களை கூறியதாக விவிலியம் கூறுகிறது. 
    இதை நினைவு கூரும் வகையில் கிறிஸ்தவர்கள் இந்த நாளை பெரிய வெள்ளி அல்லது புனித வெள்ளி என அழைத்து துக்க நாளாக கடைப்பிடிக்கின்றனர். இதையொட்டி, விருதுநகரில் உள்ள தேவாலயங்களில் இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவு கூரும் வகையில் கிறிஸ்தவர்கள் பிப். 14 ஆம் தேதி சாம்பல் புதன் முதல் 40 நாள்கள் நோன்பு இருந்து 7 வெள்ளிக்கிழமைகளில் இயேசு கிறிஸ்துவின் 14 திருப்பாடுகளை தியானிக்கும் சிலுவை பாதை வழிபாடுகளை நடத்துவர்.
     புனித வெள்ளியன்று அதிகாலை முதல் இரவு வரை நற்கருணை ஆராதனை, சிலுவை பாதை வழிபாடு, சிறப்பு திருப்பலி, மறையுரை நடைபெற்றது. தூய இன்னாசியார் ஆலயத்தில் பாதிரியார் அம்புரோஸ், துணை பாதிரியார் ஜான்பால் ஆகியோர் தலைமையிலும், பாண்டியன் நகர் தூய சவேரியார் ஆலயத்தில் பாதிரியார் ஆரோக்கிய செல்வம், எஸ்எப்எஸ் மேல்நிலைப்பள்ளி முதல்வர் அருள் பிரான்சிஸ் தலைமையிலும், நிறைவாழ்வு நகர் தூய ஜெபமாலை அன்னை ஆலயத்தில் பாதிரியாதாமஸ் வெளிஸ் தலைமையிலும், ஆர்.ஆர். நகர் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் பாதிரியார் பெனடிக்ட் பர்னபாஸ் தலைமையிலும் சிறப்பு வழிபாடு மற்றும் திருப்பலி மறையுரை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.     
     ஸ்ரீவில்லிபுத்தூரில்: ஸ்ரீவில்லிபுத்தூர், சி.எஸ்.ஐ. தூய தோமா தேவாலயத்தில் புனித வெள்ளி சிறப்பு ஆராதனை சபைகுரு அருள்திரு ஜே.ஜான் கமலேசன் தலைமையில் நடைபெற்றது. திருமண்டலத்தின் மூத்த போதகர் டி.சைமன் முத்துச்சாமி ஆராதனையை நடத்தினார். நாசரேத், சிவகாசியிலிருந்து வந்திருந்த டேவிட் சாலமோன், போஸ், ஆப்ரகாம், ஜாஸ்பர் ஆகியோர் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையும்போது கூறிய 7 வசனங்களின் அடிப்படையில் தேவ செய்தி அளித்தனர். ஆராதனையில் திருச்சபை மக்கள்  ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai