Enable Javscript for better performance
பேருந்து நிழற்குடையை சீரமைக்க கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    சாத்தூர் அருகே பேருந்து நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே தாயில்பட்டி ஊராட்சிக்குள்பட்ட கோட்டையூர் கிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ராமலிங்காபுரம், பசும்பொன்நகர் உள்ளிட்ட பகுதிகள் பிரதான சாலையில் உள்ளன. 
    சாத்தூரிலிருந்து தாயில்பட்டி வழியாக சிவகாசி, வெம்பக்கோட்டை உள்ளிட்ட கிராமங்களுக்குச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் இந்த பகுதியில் நின்று செல்கின்றன. 
    ஆனால், இந்தப் பகுதியில் உள்ள பேருந்து நிழற்குடை மிகவும் சிதிலமடைந்துள்ளது. மேலும், இந்த நிழற்குடையை அப்பகுதியினர் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 
    இதனால், நிழற்குடையை பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
        கோட்டையூர் பகுதியில்தான்அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. எனவே, தினமும் ஏராளமானோர் நிழற்குடையை பயன்படுத்த முடியாமல், சாலையோரம் வெயிலிலும், மழையிலும் காத்திருக்கின்றனர். 
    எனவே, இந்தப் பேருந்து நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என, இப்பகுதி மக்களும், பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai