Enable Javscript for better performance
ராம்கோ தொழில்நுட்ப கல்லூரியில் தமிழ்மன்ற விழா- Dinamani

சுடச்சுட

    

    ராஜபாளையம் ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழ் மன்ற விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
    தமிழ்மொழியின் பெருமையை பறைசாற்றும் விதமாக "உயர்தனிச்செம்மொழி' எனும் தலைப்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு கல்லூரி முதல்வர் மகேந்திரகெளடா தலைமை வகித்தார். மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைத் தலைவர் கண்ணன் முன்னிலை வகித்தார். 
    இதில், சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று,  பேசுகையில்,"உலகின் தொன்மையான நாகரிகம் தமிழ் நாகரிகம். உலகின் பழைமையான மொழிகள் அனைத்தும் ஒரே வடிவமான பிராமி எனும் வடிவத்தில் இருந்து தான் வளர்ச்சி பெற்றது. கிறிஸ்துப் பிறப்புக்கு முன் தமிழ் மொழியில் மட்டும் தான் 46 பெண் எழுத்தாளர்கள் இருந்தனர்' என்றார்.
     இதைத்தொடர்ந்து, கல்லூரியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். மாணவி நிவேதா நன்றி கூறினார். விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழ்மன்ற ஒருங்கிணைப்பாளர் சந்தன மருதுபாண்டியன் செய்திருந்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai