Enable Javscript for better performance
விருதுநகரில் டாடா தனிஷ்க் நகை கண்காட்சி- Dinamani

சுடச்சுட

    

    விருதுநகர் - அருப்புக்கோட்டை சாலையில் உள்ள ஸ்ரீராஜராஜேஸ்வரி கட்டட வளாகத்தில் டாடா தனிஷ்க் நகை கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது.
     கண்காட்சியை தொழிலதிபர் டி.கே.எஸ்.பி.சங்கரபாண்டியன் தொடங்கி வைத்தார். அவரது மனைவி தேவசுந்தரி அம்மாள், விவிவி மகளிர் கல்லூரி இணைச் செயலாளர் மைதிலி, வெள்ளைச்சாமி நாடார் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியை சந்தானலட்சுமி, ரோட்டரி சங்க நிர்வாகி விஜயகுமாரி ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர்.
     சனிக்கிழமையுடன்  நிறைவடையும் இக்கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் நகைகளின் செய்கூலியில் 10 சதவீதமும், வைர நகைகளுக்கு 10 சதவீதமும் தள்ளுபடி வழங்கப்படும். கண்காட்சிக்கான ஏற்பாடுகளை நிறுவன உரிமையாளர் ராஜேஷ், மேலாளர் ராஜேஸ்வரன் ஆகியோர் செய்துள்ளனர். காளீஸ்வரி கல்லூரி பேராசிரியர் ராம்தாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் என அந்நிறுவனத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai