Enable Javscript for better performance
விவசாயி வீட்டில் 17 பவுன் நகை, பணம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    ராஜபாளையம் அருகே விவசாயி வீட்டில் 17  பவுன் நகை, ரூ.19 ஆயிரம் வியாழக்கிழமை திருடுபோனது குறித்து தளவாய்புரம் போலீஸார் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராஜபாளையம் அருகே உள்ள மீனாட்சிபுரம் மாடசாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (47). விவசாயியான இவரது மனைவி விஜயலட்சுமி. இருவரும், வியாழக்கிழமை காலை வீட்டை பூட்டிவிட்டு வயல் வேலைக்கு சென்று விட்டனர். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள், உள்ளே புகுந்து பீரோவில் இருந்த பதினேழரை பவுன் நகை, ரூ. 19 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பிச் சென்றனர்.
    இந்நிலையில் மாலையில் வீடு திரும்பிய ராதாகிருஷ்ணன், விஜயலட்சுமி நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.  தளவாய்புரம் போலீஸில் ராதாகிருஷ்ணன் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai