Enable Javscript for better performance
வெம்பக்கோட்டை பகுதியில் கருவேப்பிலை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்- Dinamani

சுடச்சுட

    

    வெம்பக்கோட்டை பகுதியில் கருவேப்பிலை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

    By DIN  |   Published on : 31st March 2018 01:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை பகுதியில் மருத்துவ குணம் கொண்ட கறிவேப்பிலை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
     சமையல் என்றாலே அதில் இடம்பெறும் முக்கியப் பொருள்களில் ஒன்று கறிவேப்பிலை. நறுமணத்துக்காக மட்டுமின்றி மருத்துவ குணம் கொண்டதாகவும் இது உள்ளது. ரத்தசோகை, வயிற்றுப்போக்கு, தோலில் ஏற்படும் நோய்த்தொற்று, கண்பார்வை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் கறிவேப்பிலை பயன்பட்டு வருவதாக மருத்துவர்கள் கூறுகின்னறர். இவ்வாறு சிறப்பு வாய்ந்த கறிவேப்பிலை சாகுபடியில் வெம்பக்கோட்டை பகுதி விவசாயிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், இது நிலையான வருமானம் தரும் விவசாயமாக உள்ளது. வறட்சியில் கொம்பு காய்ந்தாலும் துளிர்விடும் தன்மை கொண்டது கறிவேப்பிலை. குறைவாக மழை பெய்தாலே துளிர்த்துஅதிக மகசூல் கொடுக்கும். இதை உணர்ந்து  விவசாயிகள் கறிவேப்பிலையை ஆர்வத்துடன் பயிரிடுகின்றனர். வெம்பக்கோட்டை கங்கர்செவல் பகுதியில் 2 ஏக்கர் முதல் 15 ஏக்கர் வரை விவசாயம் செய்து நல்ல வருமானம் ஈட்டி வருவதாக கறிவேப்பிலை விவசாயிகள் கூறுகின்றனர். 
     இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது:  கறிவேப்பிலைக்கு 15 நாளைக்கு ஒரு முறை தண்ணீர் விட்டால் போதும். ஆண்டுக்கு ஒரு முறை எரு இட்டு, நன்கு பராமரித்தால் ஏக்கருக்கு அதிகபட்சம் 5 டன் சாகுபடி கிடைக்கும். பராமரிப்பு, கூலி என ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரம் மட்டும் செலவாகிறது. தற்போது கிலோ ரூ.34 முதல் ரூ. 40 வரை விலை போகிறது. 3 மாதத்துக்கு ஒருமுறை ரூ.80 ஆயிரம் வரை கிடைக்கும். மருத்துவக்குணம் கொண்டதால் என்றுமே மவுசுகுறையாது. இதனால் இந்த பகுதியில் அதிகளவில் கறிவேப்பிலையை அதிக அளவில் பயிரிட்டு வருகிறோம் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai