Enable Javscript for better performance
கிராமப் பள்ளி வளர்ச்சிக்காக கல்வி அதிகாரியுடன் கிராம மக்கள் சந்திப்பு- Dinamani

சுடச்சுட

    

    கிராமப் பள்ளி வளர்ச்சிக்காக கல்வி அதிகாரியுடன் கிராம மக்கள் சந்திப்பு

    By DIN  |   Published on : 18th May 2018 01:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சின்ன அத்திகுளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை மேம்படுத்துவது தொடர்பாக, மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரை கிராம மக்கள் மற்றும் கல்விக் குழுவினர் வியாழக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
         சுமார் 200 பேர் படித்த சின்ன அத்திகுளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, தற்போது மிகக் குறைந்த மாணவர்களுடன் செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் கல்வித் தரத்தை மேம்படுத்தவும், கிராமத்தில் உள்ள அனைத்து குழந்தைகளையும் இப் பள்ளியில் சேர்ப்பதற்கும், கிராம மக்கள் கடந்த வாரம் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கை பிரபல கல்வியாளரைக் கொண்டு நடத்தினர்.
        இதற்காக, மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் முத்துகிருஷ்ணனை சந்தித்து, பள்ளியை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, கிராம மக்களின் விழிப்புணர்வு மற்றும் பள்ளியின் மீது அவர்கள் கொண்டுள்ள அக்கறையை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் வெகுவாகப் பாராட்டியதுடன், பள்ளியின் மேம்பாட்டுக்கான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதியளித்தார். 
    மேலும், அனைத்து கிராமங்களிலும் இதுபோன்ற விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். 
       அதையடுத்து, கல்விக் குழு சார்பில் ராமராஜ் மற்றும் திருப்பதி ஆகியோர் வாழ்க்கையில் முன்னேற 35 புத்தகங்கள் என்ற நூலை, மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலருக்குப் பரிசாக வழங்கினர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai