Enable Javscript for better performance
கொக்கலாஞ்சேரி சாலையில் மழைநீர் தேக்கம்: வாகன ஓட்டிகள் அவதி- Dinamani

சுடச்சுட

    

    கொக்கலாஞ்சேரி சாலையில் மழைநீர் தேக்கம்: வாகன ஓட்டிகள் அவதி

    By DIN  |   Published on : 18th May 2018 01:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சத்திரரெட்டியபட்டியிலிருந்து கொக்கலாஞ்சேரி செல்லும் சாலை சேதமடைந்துள்ளதால், மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். 
         விருதுநகர் அருகே சத்திரரெட்டியபட்டியிலிருந்து கொக்கலாஞ்சேரி கிராமம் 1 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு, சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக் கிராமத்துக்கு, கடந்த பல ஆண்டுகளாக மண் பாதையே உள்ளது. இப்பாதையைப் பயன்படுத்தியே பொதுமக்கள் விருதுநகருக்கு வந்து செல்வர்.      மேலும், இக்கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் சத்திரரெட்டியபட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். மகப்பேறு உள்ளிட்ட அவசர சிகிச்சைக்காக விருதுநகருக்கும் இப்பாதை வழியே வந்து செல்லவேண்டும்.     இந்நிலையில், மழைக் காலங்களில் இப்பாதையில் குளம் போல் தண்ணீர் தேங்கி விடுவதால், மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வர முடியாமலும் மற்றும் நோயாளிகள் மருத்துவமனைக்கு விரைவில் செல்ல முடியாமலும் சிரமப்படுகின்றனர். இரவு நேரங்களில் இவ்வழியே இரு சக்கர வாகனத்தில் செல்வோர், அடிக்கடி பள்ளத்துக்குள் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.    எனவே, மண் பாதையை தார் சாலையாக உடனடியாக மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai