Enable Javscript for better performance
சாத்தூர் பகுதியில் அடிப்படை வசதி செய்து தரக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    சாத்தூர் பகுதியில் அடிப்படை வசதி செய்து தரக் கோரிக்கை

    By DIN  |   Published on : 18th May 2018 01:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாத்தூர் நகராட்சிக்குள்பட்ட 2 ஆவது வார்டில் அடிப்படை வசதிகள் செய்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
         சாத்தூர் 2 ஆவது வார்டில் உள்ள அண்ணா நகர் சூடக் கம்பெனி தெரு, குருலிங்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வாருகால் வசதி, சாலை வசதி உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. இது குறித்து இப்பகுதியினர் நகராட்சி நிர்வாகத்துக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
        மேலும், வாருகால் வசதி இல்லாததால், மழைக் காலங்களில் தெருக்களில் தண்ணீர் தேங்கி வீடுகளுக்குள்ளும் புகுந்துவிடுவதால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். 
         கடந்த இரு நாள்களாக மழை பெய்து வருவதால், சாத்தூர் பகுதி தெருக்களில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மழை நீரில் கழிவு நீரும் கலப்பதால், துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்களின் உற்பத்தி அதிகமாகி, பொதுமக்கள் காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.
        எனவே, இப்பகுதிகளில் நகராட்சி நிர்வாகம் உடனடியாக அடிப்படை வசதிகளை செய்து தர முன்வரவேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai