Enable Javscript for better performance
சிவகாசி கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்- Dinamani

சுடச்சுட

    

    சிவகாயில் அமைந்துள்ள விஸ்வநாதர்-விசாலாட்சியம்மன் கோயில் வைகாசி பிரம்மோற்சவ திருவிழாவையொட்டி, வியாழக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.   
         இதையொட்டி, கணபதி ஹோமம் நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்புப் பூஜை, அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. கொடி மரத்துக்கு சிறப்பு அபிஷேகத்தைத் தொடர்ந்து,  கொடியேற்றம் நடைபெற்றது. அதன்பின்னர், கொடி மரத்துக்கு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.      கொடி மரத்துக்கு எதிரே பிரியாவிடை மற்றும் விசாலாட்சி அம்மனுடன் விஸ்வநாத சுவாமி ஊஞ்சலில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுவாமிக்கு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
        பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, தினசரி காலை மற்றும் இரவு சுவாமி மற்றும் அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருவர். விழாவின் 7 ஆவது நாளான மே 23ஆம் தேதி இரவு, ரிஷப வாகனத்தில் சுவாமி பிரியாவிடையுடன் தபசு காட்சியளித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று நள்ளிரவில் திருக்கல்யாணம் நடைபெறும். 9 ஆவது நாளான மே 25ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
         முன்னதாக, இவ்விழாவை முன்னிட்டு மே 16ஆம் தேதி அங்குரார்பணம், மூஷிக வாகனத்தில் விநாயகர் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
        இதற்கான ஏற்பாட்டினை, கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai