Enable Javscript for better performance
தொடக்கக் கூட்டுறவு வங்கிகள் தடையின்றி செயல்பட நடவடிக்கை எடுக்க கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    தொடக்கக் கூட்டுறவு வங்கிகள் தடையின்றி செயல்பட நடவடிக்கை எடுக்க கோரிக்கை

    By DIN  |   Published on : 18th May 2018 01:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் மாவட்டத் தொடக்கக் கூட்டுறவு வங்கிகள் தடையின்றி செயல்பட நடவடிக்கை எடுக்கவேண்டும் என, தமிழ்நாடு தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில், கூட்டுறவுச் சங்கப் பதிவாளரிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
        அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 4,500 தொடக்கக் கூட்டுறவுச் சங்கங்களில் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் 4 கட்டமாக அறிவிக்கப்பட்டது. தேர்தல் நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்தால் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு, வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது.     இந்நிலையில், ஏற்கெனவே பொறுப்பில் இருந்த நிர்வாகக் குழுவின் பதவி காலம் மே 8 இல் முடிவடைந்தது. இதனால், தொடக்கக் கூட்டுறவு வங்கிகளில் எந்தவித தீர்மானமும் நிறைவேற்ற முடியவில்லை. மேலும், பயிர் கடன், நகை கடன், மகளிர் குழு கடன் வழங்குதல் உள்ளிட்ட எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள முடியவில்லை.
        சங்கங்களின் காசோலைகள் மூலம் மத்திய வங்கியில் பணம் பெற இயலாத காரணத்தால், சங்கங்களில் இட்டு வைப்பு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு முதிர்வடைந்த வைப்புத் தொகையையும் வழங்க முடியவில்லை. கூட்டுறவுச் சங்கங்களின் அன்றாட வரவு, செலவுகளை மேற்கொள்ளவும் முடியாத சூழ்நிலை உள்ளது.
        இதேபோல், பணியாளர்கள், ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வு கால நிதி பலன்கள் வழங்க இயலாத நிலையுள்ளது.
        இது குறித்து அரசுக்கு தெரியப்படுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே, சங்க நிர்வாகம் தொய்வின்றி நடைபெறும் வகையில், தமிழக அரசு உரிய உத்தரவு பிறப்பிக்கும் வரை, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் அனைவரும் மே 21 ஆம் தேதி முதல் ஒட்டுமொத்த விடுப்பு எடுக்க உள்ளதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai