Enable Javscript for better performance
பாளையம்பட்டி துணை மின் நிலையம் அருகே குப்பைகளை எரிப்பதால் விபத்து அபாயம்- Dinamani

சுடச்சுட

    

    பாளையம்பட்டி துணை மின் நிலையம் அருகே குப்பைகளை எரிப்பதால் விபத்து அபாயம்

    By DIN  |   Published on : 18th May 2018 01:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம் பாளையம்பட்டியில் உள்ள துணை மின்நிலையம் அருகே குப்பைகளை எரிப்பதால், விபத்து அபாயம் நிலவுகிறது.
           பாளையம்பட்டியிலிருந்து மதுரை நோக்கிச் செல்லும் சாலையில், மதுரை-தூத்துக்குடி நான்குவழிச் சாலை இணையும் இடத்தில் துணை மின்நிலையம் உள்ளது. இத் துணை மின்நிலையத்தின் அருகிலேயே பாளையம்பட்டி ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள்  கொட்டப்படுகின்றன. இங்கு, குப்பைகளை தரம் பிரிக்காமலேயே அன்றாடம் தீவைத்துக் கொளுத்தப்படுகிறது. இதனால், அப்பகுதியில் புகை பரவி பொதுமக்களுக்கு கண் எரிச்சலை ஏற்படுத்துவதுடன், இதை சுவாசிக்கும் பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. 
        மேலும், தீயில் குப்பையிலுள்ள சில பொருள்கள் வெடித்து தீப்பொறி பறக்கிறது. இது, அருகிலுள்ள துணை மின்நிலைய மின்மாற்றிகள் மீது விழுந்து பெரிய விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, விபத்தைத் தவிர்க்க துணை மின்நிலையம் அருகே அதிக அளவில் குப்பைகளைக் கொட்டி எரிப்பதைத் தடுக்கவேண்டுமென, சமூகநல ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai